New Year Gospel from Pastor. Allwyn Kingston
கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே! உங்கள் அனைவருக்கும் எங்கள் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
தேவனிடத்தில் பெரிய காரியங்களை எதிர்பார்! என்ற வில்லியம் கேரியின் கூற்றின்படி, ஒரு பெரிய எதிர்பார்ப்போடு இந்த புதிய ஆண்டில் பிரவேசிப்போமாக! #எதிர்பார்ப்பு இல்லாதவர்கள் எதையுமே பார்ப்பதில்லை# தாகமுள்ளவர்கள் மேலேயே தேவன் தண்ணீரை ஊற்ற விரும்புகிறார்.
எதிர்பார்ப்பு என்று சொல்லும்போது ஆசிர்வாதத்தின் மேலுள்ள எதிர்பார்ப்பு அல்ல! ஆசிர்வாதங்களை கொடுக்க வல்ல அவருடைய வார்த்தையின் மேல் எதிர்பார்ப்பு!
வாக்குதத்தம் - Isaiah 43:12
"நானே தேவன் என்பதற்கு நீங்கள் எனக்குச் சாட்சிகள் என்று கர்த்தர் சொல்லுகிறார். "
"Therefore you are My witnesses, says the Lord, that I am God."
ஒரு சராசரி வாழ்க்கை வாழ தேவன் நம்மை அழைக்காமல்,சாட்சியுள்ள வாழ்க்கை வாழவே தேவன் நம்மை தெரிந்துள்ளார். நாம் நம்மை குறித்து சொல்வது சாட்சியல்ல!பிறர் நம்மைகுறித்துச் சொல்வதும் சாட்சியல்ல! (உதாரணமாக: இந்த brother/sister நல்லா prayer பண்ணுவாங்க, ஊழியம் செய்வாங்க,ரொம்ப நல்லவங்க இதெல்லாம்...) அப்போ எதுதான்பா சாட்சி??? மற்றவர்கள் உங்கள் மூலம் தேவனை குறித்துச் சொல்வதே சாட்சி!
எனவேதான் வேதம் இப்படி சொல்லுகிறது! பல பல பல தெய்வங்களில் நானும் ஒரு தெய்வம் என்றல்ல, நானே தேவன் என்பதற்கு நீங்கள் எனக்குச் சாட்சிகளென்று!
"நான் இன்னொரு தேவனுக்கு அடுத்தபடியாக (காலத்தால்) தேவனாக வரவில்லை! எனக்கு பின்னர் இன்னொரு தேவன் தோன்றபோவதில்லை.எப்போதும் நானே தேவனாய் இருக்கிறேன்" என்று தேவன் கூறுகிறார்."(ஏசா-43:10-11)
1சாமு-17:46-ல் தாவீது கோலியாத் முன்பு நிற்கும் போது, இதினாலே இஸ்ரவேலில் தேவன் ஒருவர் உண்டு என்று பூலோகத்தார் எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார்.
இதுவே சாட்சி.
#நான் யார் என்று காட்டுவது காட்சி!
தேவன் யார் என்று காட்டுவதே சாட்சி!#
தானியேல்-6:4 -ல் தானியேலை குற்றம் சாட்டுவதற்கு ஒன்றுமில்லாதிருந்தது.
அவன் ஜெபிக்கிறவன் என்றே குற்றம்சாட்டபட்டான்.
இதுவல்லவோ சாட்சி.
இந்த 2019 ஆம் ஆண்டில் நாம் ஜெபிக்கிறவர்கள் என்று சாட்சி பெறுவோமாக! பெற்றுக்கொள்வது எல்லாமே ஜெபத்தின் மூலமாகவே பெறுவோமாக!
அதெல்லாம் Ok Bro!நாங்க எப்டி சாட்சியாக வாழறது???
பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார். அப்போஸ்தலர் 1:8 #பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும்# பரிசுத்த ஆவி அருளப்படுவதன் நோக்கமே, நாம் தேவனுக்கு சாட்சியாய் வாழவே! அந்த சாட்சி இந்த இனிய புத்தாண்டில் நம் வாழ்க்கையிலிருந்தே துவங்குவதாக!
*Be an Example Man*
*Be an Example Family*
*Be an Example Church*
தேவன் உங்களை இந்த புதிய ஆண்டில் ஆசீர்வதித்து சாட்சியாய் நிறுத்துவாராக!
- ஆமென்.
Author - Pastor. Allwyn Kingston
David encouraged and strengthened himself in the Lord his God.