Bethel Bells 1 year ago
Bethel Bells #Sermons

William Ault Biography in Tamil

William ஆல்ட். இவர் 1778 ஆண்டு இங்கிலாந்தில் உள்ள வெஸ்ட் ப்ராம்விக் என்ற ஊரில் ஷூ தயாரிப்பாளரான யாபேஸ் ஆல்ட் என்பவருக்கு மகனாகப் பிறந்தார்

William Ault

இவர் 1778 ஆண்டு இங்கிலாந்தில் உள்ள வெஸ்ட் ப்ராம்விக் என்ற ஊரில் ஷூ தயாரிப்பாளரான யாபேஸ் ஆல்ட் என்பவருக்கு மகனாகப் பிறந்தார் .இவர் தன்னுடைய ஏழாம் வயதுக்குள்ளாகவே பைபிளை ஏறக்குறைய ஆறு முறை படித்து விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் தன் 17 ஆம் வயதில் அவர் இருந்த ஊரிலேயே ஞாயிறு வேதாகம பள்ளி நடத்தி வந்தார் .அவர் போதகராக ஊழியத்தில் 1808 ஆம் ஆண்டு சேர்ந்தார். பின்னர் தாமஸ் குக் Thomas Cook என்ற மிஷனரியிடம், கடல் கடந்து சென்று மிஷனரிப் பணி செய்வதற்கு தனக்கு இருக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.

1813ஆம் ஆண்டு ஸ்ரீலங்காவுக்கு Srilanka நற்செய்தி அறிவிக்க தன்னோடு அழைத்துச் செல்ல 6 மிஷனரிகளை தேர்வு செய்தார். அவர்களுள் ஒருவர் வில்லியம் ஆல்ட் ஆவார். தன் மனைவியாகிய சாராளுடன் மிஷனரியாக ஸ்ரீலங்காவுக்கு செல்லத் தீர்மானித்தார். லேடி மெல்வில்(lady Melville) என்னும் கப்பலில் டிசம்பர் 31ம் தேதி 1813ஆம் ஆண்டு தங்கள் கடல் பயணத்தை தொடங்கினார்கள். அந்த பிரயாணத்தின்போது வில்லியமின் மனைவி சாராள் நோய்வாய்ப்பட்டு பிப்ரவரி 9ஆம் நாள் 1814 ஆம் ஆண்டு மரித்துப் போனார். இதனை தொடர்ந்து எதிர்பாராத விதமாக தாமஸ் Thomas cook அவர்களும் அந்த பயணத்திலேயே மரித்துப் போனார். ஆகையால் வில்லியமும் அவரது சக ஊழிய காரர்களும் தாமஸ் கோக்கின் மிஷினரி திட்டத்தை நிறைவேற்றுவதற்கு தனியாக விடப்பட்டனர். அவர்கள் ஸ்ரீலங்காவை சென்று அடைந்த பின்பு சீட்டு போட்டு எந்த இடத்திற்கு யார் செல்வது என்று முடிவு செய்தனர். அப்பொழுது வில்லியம் ஆல்ட் அவர்களுக்கு மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட மிஷன் பகுதியான பட்டிகோலா(Batticaloa ) என்ற பகுதி கொடுக்கப்பட்டது. அந்த இடத்திற்கு அவர் வந்தடைந்த கொஞ்ச காலத்திலேயே காய்ச்சலினால் அவதிப்பட்டார் .அந்த சீதோசன நிலை அவருக்கு ஏற்றுக் கொள்ளவில்லை.

"பட்டிகோலாவிலுருந்து இவர் தனது தாயாருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் இவ்வாறு எழுதியுள்ளார் .நான் இங்கு மிகவும் கஷ்டப்பட்ட சூழ்நிலையில் வசித்து வருகிறேன். என்னுடைய வீட்டில் எந்த வித உணவு பொருட்களும் கிடையாது.சிக்கன் மட்டன் மட்டுமல்ல வெஜிடபிள்ஸும் கூட கிடையாது. இந்த மிஷனரி பயணத்தை நல்ல முறையில் முடிக்க வேண்டும் என்பதே என் நோக்கமாக உள்ளது. இந்த இடம் எனக்கு வசதியான வாழ்க்கையை ஏற்படுத்தவில்லை இன்னும் சொல்ல வேண்டும் என்றால் அத்தியாவசிய தேவைகள் கூட பூர்த்தி செய்யப்படவில்லை. இது ஒரு தீவாக இருப்பதனால் இங்கே எல்லாவிதமான பொருட்களுமே கடல்வழியாக வந்தடைய வேண்டிய நிலைமை உள்ளது. இங்கே எனக்கு பால் கூட கிடைக்காது. இங்கு இரண்டு வருடமாக அந்த அளவுக்கு மழையும் கிடையாது. நிறைய ஆடு மாடுகள் எல்லாம் பஞட்சத்தில் இறந்து போயிருக்கின்றன. நான் இங்கு தங்கி இருப்பது ஒரு மண்ணாலான குடிசை வீடு .மேல்பகுதியில் இலைகளினால் மூடப்பட்டிருக்கும். என்னோட ஜன்னல்களுக்கு கிளாஸ்ஃ(கதவு) எல்லாம் கிடையாது. எப்போதாவது மழை பெய்தால் நான் அந்த வீட்டுக்குள் எந்த இடத்தில் காய்ந்த தரை உள்ளது என்று தேடி ஓடவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறேன். அந்த இடத்தில் என்னை குறுக்கிக் கொண்டு அந்த மழை நிற்கும் வரை நின்று கொண்டிருப்பேன் அதிகமான மழை பெய்யுமானால் என் நிலைமை என்ன ஆகும் என்று தெரியவில்லை. இதைவிட மிகவும் மோசமான விஷயம் என்னவென்றால் இங்கு உள்ள பூச்சிகள். ராத்திரி நிம்மதியான தூக்கம் என்று ஒன்று எனக்கு கிடைக்கவே இல்லை. இந்த பூச்சிகள் மிக மோசமாக ராத்திரி வேளையில் கடித்துவிடும் காலையில் எழும் போது பூச்சி கடித்த இடத்தில் வீக்கத்தோடும் வலியோடும் தான் எழுவேன். கூடிய சீக்கிரம் நல்ல ஒரு வீடு கட்டவேண்டும் சின்னதாக ஒரு தோட்டமும் ஏற்படுத்தினால் தான் எனக்கு என் உணவுக்கு தேவையான காய்கறிகளை நானே உற்பத்தி பண்ணிக் கொள்ள முடியும். ஆனால் எனக்கு தெரியவில்லை அடுத்த மழை வருவதற்குள் என்னால் ஒரு நல்ல வீடு கட்ட முடியுமா என்று இவ்வாறாக தன் அம்மாவுக்கு தான் பாடும் கஷ்டத்தையும் போராட்டத்தையும் அவர் எழுதியுள்ளார்."

இந்த சூழ்நிலையிலும் அவர் அயராது தன் மிஷனரி பணியைச் செய்து வந்தார். ஒரு நாளைக்கு 20 மணி நேரம் கடுமையாக உழைத்து வந்தார். காலை 3, 4 மணிக்கு எழுந்து பணியாற்ற ஆரம்பிப்பவர் இரவு 12 மணி வரை அயராது உழைப்பார்.தன் நேரத்தை படிப்பதிலும் எழுதுவதிலும் குழந்தைகளுக்கு கற்பிப்பதிலும் சபைகளில் போதிப்பதிலும் செலவழித்து வந்தார்.8 கல்வி நிறுவனங்களை ஸ்தாபித்தார், தமிழ் கற்றுக் கொண்டார், 20 நபர்கள் கொண்ட ஒரு சமூக குழுமத்தை ஏற்படுத்தினார் .150 நபர்கள் கூடும் ஒரு சபையை நிறுவினார். இவ்வாறு அவர் ஓய்வின்றி கடுமையாக உழைத்ததின் விளைவாக ஜனவரி 1815 ஆம் ஆண்டு மிகவும் மோசமான உடல் பாதிப்புகளுக்கு உள்ளானார்.

1815 ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.

அவரது உடல் அங்குள்ள டச் சர்ச்சில் அடக்கம் செய்யப்பட்டது அங்குள்ள மக்கள் அவருக்கு ஒரு ஞாபக அடையாளத்தை அந்த இடத்தில் கட்டி உள்ளனர். 1897 ஆம் ஆண்டு பட்டிகோலாவிலுள்ள புதிதாக கட்டப்பட்ட மிஷன் ஹாலுக்கு இவரது பெயரில் வில்லியம் ஆல்ட் மெமோரியல் ஹால் என்று பெயரிடப்பட்டுள்ளது.

0
# Sermons

Power of Prayer | Charles Finney

Bethel Bells 2 years ago
1
# Sermons

Happy New Year 2019 | New Year Gospel Sermon | Tamil

New Year Gospel from Pastor. Allwyn Kingston

Bethel Bells 2 years ago
0
# Sermons

Do you read Bible only on Sundays? | Bartholomäus Ziegenbalg...

Bethel Bells 2 years ago
0
# Sermons

Sarah Tucker| Founder of Pioneer institutions for Women

Bethel Bells 2 years ago
1
# Prayer

Pray For Churches

Bethel Bells 2 years ago